குளிர்காலத்தில் ஜேர்மானியர்கள் இப்படித்தான் ஜலதோஷத்தை சமாளிக்கிறார்களாம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

குளிர்காலம் வந்தாயிற்று, எங்கு பார்த்தாலும் ஒரே தும்மலும் ஜலதோஷமும்தான், அப்படியிருக்கும் நிலையில், ஜேர்மானியர்கள் இப்படித்தான் ஜலதோஷத்தை சமாளிக்கிறார்களாம்.

முதலாவது ஜலதோஷத்துக்கு எதிராக ஜேர்மானியர்கள் பயன்படுத்தும் பொருள் தேநீர்.

இஞ்சி தேநீர், பூண்டு தேநீர் என்று தொடங்கி, வெங்காய தேநீர் வரை ஜலதோஷத்திற்காகவும் ப்ளூ காய்ச்சலுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்து வெங்காயம்.

வெங்காயம் ஜலதோஷத்திற்கு அவ்வளவு நல்லதாம்.

சாக்சுக்குள் வெங்காயத்தை போட்டுவைத்தாலும் சரி, வெங்காயத்தை வெட்டி தூங்கும் கட்டிலுக்கு அருகில் வைத்தாலும் சரி, அல்லது தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து இருமல் மருந்து தயாரிப்பதானாலும் சரி, ஜேர்மனியைப் பொருத்தவரை ஜலதோஷம் வரும் முன்னே, வெங்காயம் வரும் பின்னே என்றே சொல்லலாமாம்.

ஜலதோஷத்திற்கான மற்றொரு சிகிச்சையாக பயன்படுத்தப்படுவது சுடுதண்ணீர்க் குளியல்.

சுடுதண்ணீரில் யூகாலிப்டஸ் எண்ணெய் போன்ற எண்ணெய்களைக் கலந்து குளிப்பது ஒரு சிகிச்சையாக கருதப்படுகிறது, ஆனால் ஒரு விடயம், காய்ச்சல் இருந்தால் குளிக்கக்கூடாதாம்.

ஜலதோஷத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் இருந்தால், உப்பு மற்றும் சில மூலிகைகளை தண்ணீரில் போட்டு, அதில் காலை மூழ்கவைப்பதும் உதவுமாம்.

இப்படி தனித்தன்மையுடைய பல விடயங்களை ஜேர்மானியர்கள் பின்பற்றினாலும், ஒரு விடயத்தில் அவர்கள் அமெரிக்கர்களுடன் ஒத்துப்போகிறார்களாம்.

அதாவது, யாராக இருந்தாலும் சுடச்சுட சிக்கன் நூடுல்ஸ் சூப் சாப்பிடுவது ஜலதோஷத்திற்கு அவ்வளவு நல்லதாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்