தடுமாறி விழ இருந்த ஜேர்மன் சேன்ஸலர்: தாங்கிப் பிடித்த போலந்து பிரதமர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று முறை உடல் நடுக்கம் ஏற்பட்ட நிலையில் காணப்பட்ட ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், மீண்டும் தடுமாறினார்.

நாஸிக்கள் சித்திரவதை முகாம் ஒன்று அமைந்திருந்த இடத்தை முதன் முறையாக பார்வையிட்ட ஏஞ்சலா, தடுமாறி விழ இருந்த நிலையில், அருகில் நின்ற போலந்து பிரதமர் Mateusz Morawiecki அவரைப் பிடித்துக்கொண்டார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், Auschwitz என்ற இடத்தில் அமைந்துள்ள நினைவிடம் நாஸிக்கள் சித்திரவதை முகாம் ஒன்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஏஞ்சலா, திரும்பிச் செல்வதற்காக சட்டென திரும்ப, ஒரு கணம் தடுமாறுவதைக் காண முடிகிறது.

தடுமாறி கிட்டத்தட்ட கீழே விழ இருந்த அவர், அருகிலிருந்த போலந்து பிரதமர் Mateusz Morawieckiயை பிடித்துக்கொள்வதற்காக கையை நீட்ட, சட்டென அவரைப் பிடித்துக்கொண்டார் Morawiecki.

அதற்குள் ஏஞ்சலாவின் அருகில் நின்ற அனைவரும் அவரை நோக்கி விரைய, அவரோ வழக்கம் போல எதுவும் நடக்காததுபோல நடக்கவும், மற்றவர்களுக்கு கை குலுக்கவும் தொடங்கிவிட்டார்.

இந்த ஆண்டில் மட்டும், இதற்கு முன் மூன்று முறை பொது நிகழ்ச்சிகளின்போது சேன்ஸலர் ஏஞ்சலாவின் உடல் கடுமையாக நடுங்குவதை உலகமே பார்த்தது. அவரோ தனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறிவிட்டார்.

தனக்கு நீரிழப்பு ஏற்பட்டாதாலேயே நடுங்கியதாக தெரிவித்து, தண்ணீர் குடித்துவிட்டு, தனக்கு எல்லாம் சரியாகிவிட்டதாக அவர் தெரிவித்ததும், இந்தியா சென்றபோது, தேசிய கீதங்கள் இசைக்கப்படும்போது அமர்ந்து கொள்ள அவருக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்