ஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
164Shares

ஜேர்மன் அருங்காட்சியக திருட்டு தொடர்பாக துப்பு கொடுப்போருக்கு பெருந்தொகை ஒன்றை சன்மானமாக அளிப்பதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், 500க்கும் மேற்பட்டோர் துப்பு கொடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்களன்று ஜேர்மனியின் பிரபல Dresden அருங்காட்சியகத்தின் மின்சாரத்தை துண்டித்த கொள்ளையர்கள், அருங்காட்சியகத்திலிருந்து விலை மதிப்பில்லாத நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பொலிசார் திருட்டு தொடர்பாக துப்பு கொடுப்போருக்கு 500 மில்லியன் யூரோக்கள் சன்மானம் அளிப்பதாக அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 516 பேர் வரை துப்பு கொடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு எந்த ஒரு குறிப்பிட்ட நபர் மீதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

என்றாலும், எந்நேரத்திலும் தேடுதல் வேட்டையும் விசாரணையும் திடீரென தொடங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இவ்வளவு பிரபலமான ஒரு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அந்த கொள்ளையர்கள், சிறிதே நேரத்தில் அருங்காட்சியகத்தினுள் நுழைந்து, அடுத்த சில நிமிடங்களில் வெற்றிகரமாக திருடி விட்டு சென்றதையடுத்து அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில், முடிந்தவரையில் விரைவாக அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்கு திறந்துவிட விரும்புவதாக அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகத்தில் புதிய நவீன பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்