பயணச்சீட்டு இன்றி பிடிபட்ட காதலனை காப்பாற்ற பெண் செய்த அருவருப்பான செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ட்ராம் ஒன்றில் பயணச்சீட்டு இன்றி தனது காதலனுடன் பயணம் செய்த ஒரு பெண் பயணச்சீட்டு பரிசோதகரிடம் சிக்கினார்.

இந்த சம்பவம் Gelsenkirchen நகரில் நடைபெற்றுள்ளது.

பயணச்சீட்டு இன்றி பிடிபட்டதும், பயணச்சீட்டு பரிசோதகர் அந்த 31 வயது பெண்ணின் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார்.

உடனே அந்த பெண் சட்டென தனது மேலாடையை அகற்றி, அந்த பயணச்சீட்டு பரிசோதகர் மீது தாய்ப்பாலை பீய்ச்சியடித்துள்ளார்.

பயணச்சீட்டு பரிசோதகரின் கவனம் ஒரு நிமிடம் திசை திரும்ப, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்ணின் காதலன் ட்ராமிலிருந்து குதித்து ஓடிவிட்டார்.

உடனே பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட, பொலிசார் வந்த பின்னரும், அந்த பெண் தன் அடையாள அட்டையை கொடுக்க மறுக்க, வேறு வழியின்றி, பொலிசார் அவரை தரையில் தள்ளி கைது செய்ய வேண்டியதாயிற்று.

பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தது, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்