ரோலர் கோஸ்டரில் நசுங்கி துடி துடிக்க இறந்த நபர்.. நேரில் பார்த்த பலருக்கு பாதிப்பு

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் நபர் ஒருவர் ரோலர் கோஸ்டரில் சிக்கி நசுங்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்மஸ் மார்க்கெட்டிலே இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ்-பீட்டர் வில்கர் கூறுகையில், உயிரிழந்த நபர் சந்தை ஊழியர் என்று நம்பப்படுகிறது, மேலும் அவர் ரோலர் கோஸ்டரில் மோதி அடியில் நசுக்கப்பட்டபோது வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

உயிரை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்து மனஉளைச்சல் கோளாறால் பாதிக்கப்பட்ட பல பார்வையாளர்கள் சிகிச்சை பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மட்டுமே திறக்கப்படும் பிரபலமான கிறிஸ்துமஸ் மார்க்கெட்டை அதிகாரிகள் உடனடியாக மூடியுள்ளனர், மேலும், பார்வையாளர்கள் வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்