ஜேர்மனியில் 200,000க்கும் மேற்பட்ட கன்றுகுட்டிகள் கொல்லப்படுகின்றனர் - அதிர்ச்சி தகவல்

Report Print Abisha in ஜேர்மனி

ஜேர்மனியில் விவசாயிகள் பெரும்பாலும் ஆண் கன்றுகுட்டிகளுக்கு பணம் செலவு செய்வதை விட அவற்றை கொல்வதே சிறந்தது என்று நினைக்கின்றனர் என்று பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில் ஆண்டு ஒன்றிற்கு 200,000 கன்று குட்டிகள் பிறந்து மூன்று மாதத்திற்குள் கொல்லப்பட்டுவதாக Welt am Sonntag newspaper ஞாயிறு வெளிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி ஜேர்மனியில் 4.1மில்லியன் கறவை மாடுகள் உள்ளதாகவும் அவற்றை ஐரோப்பாவில் bovine milk productionக்கு பெரும்பாலும் பயன்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பால் உற்பத்தி செய்வதற்காக விலங்குகள் செறிவூட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கன்றை ஈன்றெடுக்கின்றன.

இந்தவகை ஆண் கன்றுகுட்டிகள் இறச்சிக்கும் பயன் தருவதில்லை. எனவே பல விவசாயிகள் அவை வீண் என்று நினைக்கின்றனர்.

Bavarian கால்நடை சங்கத்தின் துணைத்தலைவரன Iris Fuchs விவசாயிகள் பெரும்பாலும், கன்றுகளை முறையாக அகற்ற பணம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கன்று €30 கூட மதிப்பில்லை என்றால் அதை வீண் என்று எண்ணுகின்றனர். மேலும், கால்நடை மருத்துவத்திற்கு € 50 தேவை படுகின்றது. மதிப்பற்ற கன்றுக்கு இவ்வளவு செலவு அதிகமாக கருதுகின்றனர்.

இதன்விளைவாக பல்லாயிரகணக்கான கன்றுக்குட்டிகள் பிறந்து சிலமணிநேரத்தில் சட்டவிரோதமாக அகற்றப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண் கன்றுகுட்டிகள் பெரும்பாலும், கொல்லப்படாமல் உயிருடன் குப்பைகள் மூலம் வெளியேற்றப்படுகின்றது என்று அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதுபோன்று செயல்கள் சட்டவிரோதமானது என்று பசுமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Anton Hofreiter தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜேர்மன் வேளாண் அமைச்சகத்தை சேர்ந்த Herman Onko Aeikens என்ற அதிகாரி இதுபோன்ற தகவல்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்