கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஒருவர் பலி, 23 பேர் காயம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்றில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து வாகனங்கள் மீதும் பயணிகள் மீதும் மோதியதில் ஒருவர் பலியானார், 23 பேர் காயமடைந்தனர்.

Wiesbaden நகரில் திடீரென பேருந்து ஒன்றின் 65 வயது சாரதி கட்டுப்பாட்டை இழக்க, அவரது பேருந்து தொடர்ச்சியாக பல வாகனங்கள் மீது மோதியது.

Wiesbaden முக்கிய பேருந்து நிலையத்தில் ஆட்களை ஏற்றிய அந்த சாரதி புறப்பட்டதும், தொடர்ச்சியாக சாலையில் சென்ற மூன்று கார்கள் மீது அவரது பேருந்து மோத, அந்த கார்களின் சாரதிகளுக்கு லேசாக காயம் ஏற்பட்டது.

DPA

பின்னர் புல் நிறைந்த பகுதி ஒன்றைக் கடந்த அந்த பேருந்து மேலும் மூன்று கார்கள் மீது மோத, இரு சாரதிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.மூன்றாவது காரின் சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் பின் பக்கம் மோதியதில் அந்த பேருந்தின் சாரதி மற்றும் 9 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. அத்துடன் பேருந்து நிற்கவில்லை.

பேருந்து நிலையத்தில் இருந்த இருவர் மீது மோதியதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களில் 85 வயதான ஒருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இத்தனை பேருக்கு பிரச்னையை ஏற்படுத்திய இந்த விபத்து எதனால் ஏற்பட்டது, பேருந்தில் ஏதேனும் தொழில்நுட்பக்கோளாறா அல்லது மனித தவறா என்பது தற்போதைக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

DPA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்