மூன்று பேரை பிடிக்க குவிந்த 170 பொலிசார்: ஜேர்மனியில் பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மூன்று பேரை பிடிக்க, சுமார் 170 பொலிசார் குவிந்ததால் ஜேர்மன் நகரம் ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியின் Offenbach நகரில் மூன்று அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் தொடர் ரெய்டுகளில் ஈடுபட்ட சுமார் 170 பொலிசார், மூன்று பேரைக் கைது செய்தனர்.

அவர்களில் 24 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியதோடு, ஒன்லைனில் ஆயுதங்கள் வாங்க முயன்றுள்ளார்.

அவருடைய கூட்டாளிகளான 22 மற்றும் 21 வயதுடைய துருக்கியர்கள் இருவரும் ரெய்டுகளின்போது சிக்கினார்கள்.

இந்த மூவரும் கடவுள் நம்பிக்கை இல்லாத எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரையும் கொல்ல விரும்புவதாக கங்கணம் கட்டிக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், ஏன் அவ்வாறு முடிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை.

மொத்தத்தில், இவர்கள் பிடிபட்டதால், பெரும் தீவிரவாத தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக பிராங்க்பர்ட் தலைமை பொலிஸ் அதிகாரி Nadja Niesen தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பிராங்பர்ட்டின் Rhine-Main பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கடவுள் நம்பிக்கை இல்லாத எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் Nadja தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேருமே ஐ.எஸ் ஆதரவாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை சோதனையிட்டபோது, வெடிகுண்டுகளுடன் தொடர்புடைய பொருட்களும், கருவிகளும் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்