பெர்லின் சுவருக்கு கீழ் ஒரு சுரங்கப்பாதை: சுவாரஸ்ய பின்னணி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
359Shares

பெர்லின் சுவர் வீழ்ந்ததன் 30ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில், பெர்லின் சுவருக்கு கீழ் இருந்த சுரங்கப்பாதை ஒன்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அந்த சுரங்கப்பாதை, கிழக்கு ஜேர்மனியில் இருப்போர் மேற்கு ஜேர்மனிக்கு ரகசியமாக தப்புவதற்காக கட்டப்பட்டதாம்.

அந்த 100 அடி நீள சுரங்கப்பாதையை பெர்லின் மேயரான Michael Müller திறந்து வைத்துள்ளதோடு, அதை அமைத்தவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். அந்த சுரங்கப்பாதை, கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த சிலரால் மேற்கு ஜேர்மனிக்குள் தப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டு இறுதியில், அதாவது பெர்லின் சுவர் எழுப்பப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் ஆன பின் அவர்கள் சுரங்கப்பாதையை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் சுரங்கப்பாதை கட்டி முடிப்பதற்கு சில நாட்கள் முன்பு, அதிகாரிகள் ultrasound தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதைக் கண்டுபிடித்துவிட்டனர்.

சுரங்கப்பாதையில் பாதியையும் அவர்கள் அழித்துவிட்டனர்.

ஆனால், அதற்குப்பின் 70க்கும் மேலான சுரங்கங்களை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். அந்த கால கட்டத்தில் 300க்கும் மேலானோர் கிழக்கு ஜேர்மனிக்குள் சுரங்கப்பாதைகள் வழியாக தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்