காஷ்மீரின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது: ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Vijay Amburore in ஜேர்மனி

கஷ்மீரின் தற்போதையை நிலை நல்லதிற்கில்லை. அதனை மேம்படுத்த வேண்டும் என ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வேதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசமுறை பயணமாக இந்தியா வந்திருக்கும் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், நேற்றைய தினம் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, காஷ்மீரின் தற்போதைய நிலை நல்லதிற்கில்லை, அது நிச்சயமாக மேம்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வேதனை தெரிவித்ததோடு, அங்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீண்ட காலத்திற்கு ஆதரிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு இருதரப்பு மற்றும் பலதரப்பு தளங்களில் பணியாற்ற இந்தியாவும் ஜெர்மனியும் ஒப்புக் கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ஜேர்மன் அதிபர் இவ்வாறு பேசினார்.

காஷ்மீரின் முன்னேற்றங்கள், ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்ற இருதரப்பு தூதுக்குழு பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் நவம்பர் 1 ம் தேதி இரவு தனது முறையான விருந்தின் போது, ஜம்மு-காஷ்மீருக்கான அரசாங்கத்தின் சாலை வரைபடத்தை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஜேர்மன் அதிபர் கேட்க விரும்பியதாக கூறப்படுகிறது.

முன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜேர்மன் அதிபர் விவசாயம், கல்வி, கடல் அறிவியல் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கிய 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஐந்து கூட்டு நோக்கங்களை கொண்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்