இந்தியாவிற்கு வருகை தரும் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ஜேர்மன் தூதர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் வியாழக்கிழமை 12 அமைச்சரவை குழுவுடன் இந்தியாவிற்கு வருகை தந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு தலைப்புகள் குறித்து கலந்துரையாடுவார் என்று ஜேர்மன் தூதர் வால்டர் ஜே. லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் வியாழக்கிழமை மாலை டெல்லியில் தரையிறங்குவதாகவும், அவருடன் 12 அமைச்சரவை தூதுக்குழுவும் வருவதாகவும் கூறினார்.

அமைச்சரவையின் பிரதிநிதிகள் தங்கள் இந்திய சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்கள். இதில், செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், விவசாயம் மற்றும் கால்பந்து ஆகியவை குறித்து பேசப்படும்.

சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய பெண் பிரமுகர்களுடன் மெர்கல் உரையாடுவார் என கூறினார்.

மேலும், காஷ்மீர் பிரச்சினை மெர்கலுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் விவாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, இரு தலைவர்களுக்கும் “நல்ல உறவு இருக்கிறது. அவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் பற்றி பேசலாம்” என்று லிண்ட்னர் கூறினார்.

இதனை தவிர, சனிக்கிழமையன்று விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு குர்கானில் உள்ள ஜேர்மன் நிறுவனம் மற்றும் ஒரு மெட்ரோ நிலையத்தையும் மெர்கெல் பார்வையிடுவார் என்று லிண்ட்னர் கூறினார்.

மெர்கலின் வருகையின் போது இந்தியாவும் ஜெர்மனியும் சுமார் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்