ஜேர்மனியில் துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சா கேக்: 13 பேருக்கு சிகிச்சை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் மரணம் நடந்த வீடு ஒன்றிற்கு வந்தவர்களுக்கு கஞ்சா கலந்த கேக் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

Wiethagen நகரில், இறுதிச்சடங்கு ஒன்றிற்கு வந்தவர்களுக்கு கஞ்சா என்னும் போதைப்பொருள் கலந்த கேக் வழங்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு தலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் 13 பேருக்கு சிகிச்சையளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணையில் இறங்கினார்கள்.

பொலிஸ் விசாரணையில், பேக்கரி ஒன்றில் பணி செய்யும் ஒரு பெண், தனது மகளிடம் அந்த துக்க நிகழ்ச்சியில் பரிமாறுவதற்காக கேக் ஒன்றை தயாரிக்க சொன்னது தெரியவந்தது.

ஆனால் விசாரணையில், அந்த 18 வயது இளம்பெண் தன் தாய் கூறிய கேக்கை தயாரித்து குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்ததாகவும், அதே நேரத்தில் தான் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக போதை கேக் ஒன்றை தயாரித்ததாகவும், தனது தாயார் தவறுதலாக அந்த போதை கேக்கை இறுதிச்சடங்கில் பரிமாறிவிட்டதாகவும் கூறினார்.

இறந்த ஒருவரை புதைத்தபின், உறவினர்கள் காபியும் கேக்கும் சாப்பிடுவது ஜேர்மானிய பாரம்பரியமாகும். பொலிசார் தொடர்ந்து அந்த பெண்ணை விசாரித்துவருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்