வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் கல்விக்கட்டணம்: ஜேர்மனியின் பெயருக்கு களங்கம்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளதோடு, விலைவாசியும் உயர்த்தப்பட்டுள்ளது, ஜேர்மனிக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் மாணவர்கள்.

ஜேர்மனி ஒரு காலத்தில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்கு விருப்ப நாடாக விளங்கியது.

ஆங்கிலம் பேசாத நாடுகளில், மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு சிறந்த நாடு என வெளிநாட்டு மாணவர்களால் ஜேர்மனி கொண்டாடப்பட்டதற்கு இன்னொரு முக்கிய காரணம் அங்கு கல்வி இலவசம்.

ஆனால் இதெல்லாம் 2016க்கு முன்புதான்.ஒரு ஜேர்மன் மாகாணம், ஐரோப்பிய ஒன்றியத்தார் அல்லாதோருக்கான கல்விக் கட்டணம் என ஒரு கட்டணத்தை அறிமுகம் செய்தது.

வருங்காலத்தில் அந்த கட்டணம், ஜேர்மனி வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்கு விருப்ப நாடு, என்னும் தோற்றத்தை மாற்ற வாய்ப்புள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கல்விக்கட்டணம் பெரிய பிரச்சினையாக இருக்காது, ஆனால் ஏழை நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு நிச்சயமாக கஷ்டம்தான் என்கிறார் Bonn பல்கலைக்கழகத்தில் பயிலும் Dr. Varunseelan Murugaiyan.

இந்த ஐரோப்பிய ஒன்றியத்தார் அல்லாதோருக்கான கல்விக் கட்டணம் அகதிகளுக்கு கிடையாது என்பது ஒரு முக்கிய அம்சம்.

ஜேர்மனியின் தென்மேற்கு மாகாணமான Baden-Württemberg, ஐரோப்பிய ஒன்றியத்தார் அல்லாதோர், செமஸ்டர் ஒன்றிற்கு கல்விக்கட்டணமாக 1,500 யூரோக்கள் செலுத்த வேண்டும் என்ற சட்டம் ஒன்றை, 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது.

ஆனால் அதைத்தொடர்ந்து, அந்த ஆண்டில்தானே, அந்த பகுதியில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதோடு, அதனால், ஜேர்மனி பல்வேறு நாடுகளிலுள்ள மாணவர்கள் பயிலும் சிறப்பு மிக்க ஒரு நாடு என்னும் புகழையும் இழக்க நேரிடும் என்கிறார் எத்தியோப்பியாவச் சேர்ந்த மாணவரான Dereje Tamiru Demie.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்