ஜேர்மனிக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் உள்ள அமெரிக்க படைகள் போலந்திற்கு நகர்த்தப்படும் என ஜேர்மனிக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் கிரெனெல் எச்சரித்துள்ளார்.

நேட்டோ இராணுவ கூட்டணிக்கு அதன் பங்களிப்பின் ஒரு பகுதியாக ராணுவ செலவினங்களை அதிகரிக்க ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தவறினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கிரெனெல் எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க வரி செலுத்துவோர் தொடர்ந்து பணம் செலுத்துகிறார்கள் என்பது குற்றமாகும், ஆனால், ஜேர்மனியர்கள் தங்களின் உள்நாட்டு திட்டங்களுக்காக செலவிட வேண்டும் என்று கிரெனெல் தெரிவித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற இலக்கை அடைய தவறிவிட்ட ஜேர்மன் மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்களை டிரம்ப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் நெருங்கிய நட்பு நாடான ஜேர்மனியையும் குறிப்பாக தனிப்பட்ட முறையில் மெர்க்கலையும் விமர்சித்துள்ளார்.

ஜேர்மனியில் சுமார் 35,000 அமெரிக்க படைகள், ஐந்து அமெரிக்க இராணுவப் முகாம்கள் உள்ளன, மேலும் கூடுதலாக 17,000 உள்ளுர் வீரர்கள் இருக்கின்றனர். மேலும், ஜேர்மனியிலும் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்