ஜேர்மன் மொழித்திறன் இல்லாத பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடமில்லை: அரசியல்வாதியின் பேச்சினால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போதுமான ஜேர்மன் மொழித்திறன் இல்லாத பிள்ளைகளுக்கு ஜேர்மன் பள்ளிகளில் இடமில்லை என்று கூறியுள்ள அரசியல்வாதி ஒருவருக்கு கண்டனங்கள் குவிகின்றன.

’சுருக்கமாகச் சொன்னால், ஜேர்மன் மொழியை சரியாக பேசாத மற்றும் புரிந்து கொள்ள இயலாத ஒரு குழந்தைக்கு ஜேர்மன் பள்ளிகளில் இடம் கிடையாது’ என்று கூறியிருக்கிறார், ஆளுங்கட்சியான CDUவின் நாடாளுமன்றக்குழுவின் துணைத்தலைவரான Carsten Linnemann.

இத்தகைய பிள்ளைகளால் ஜேர்மன் மொழி பேசும் சக மாணவர்களுக்கும், ஜேர்மன் பள்ளிகளின் கல்வித்தரத்திற்கும் பிரச்சினை ஏற்படும் என்றும், அதனால் மொழித்தேவைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்வதால், செலவுதான் ஏற்படும் என்று கூறியுள்ள Linnemann, ஜேர்மானியர்களோடு ஒருங்கிணைந்து வாழ்வதும் கல்வியும்தான் அதிக செலவை ஏற்படுத்தக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளார்.

Linnemannஇன் பேச்சுக்கு உடனடியாக அவரது சொந்தக் கட்சிக்குள்ளிருந்தும், கட்சிக்கு வெளியிலிருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கிவிட்டன.

காரணம், செப்டம்பர் 1ஆம் திகதி உள்ளூர் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், புலம்பெயர்தலும், ஒருங்கிணைப்பும்தான் முக்கிய பிரச்சினைகள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Linnemann கூறியுள்ளது அறிவில்லாத செயல், அவர் தவறான பாதையில் பயணிக்கிறார் என்று கூறியுள்ளார் CDU கட்சியின் கல்வி அமைச்சரான Schleswig-Holstein. சோஷலிச இடது சாரிக் கட்சியின் தலைவரான Katja Kipping, Linnemann வலது சாரியினரின் வலையில் விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என உண்மையாகவே Linnemann விரும்புவாரென்றால், அதிக ஆசிரியர்களை நியமிக்க முயல்வதோடு, ஜேர்மானியர்களோடு பழகும் குழந்தைகள்தான் மிக விரைவில் மொழியைக் கற்றுக் கொள்வார்கள் என்பதை அவர் தனக்கே முதலில் கற்றுக் கொடுத்துக் கொள்ளட்டும் என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்