பார்ட்டியில் கலாட்டா செய்த சிறுவனை கைது செய்த பொலிசார்: நண்பர்கள் செய்த துணிகர செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பள்ளி முடிந்ததைக் கொண்டாடுவதற்கும் பார்ட்டி வைக்கும் பழக்கம் பெருகி விட்ட நிலையில், பார்ட்டி ஒன்றில் கலாட்டா செய்த 15 வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

விடயம் அத்துடன் முடியவில்லை! அவனைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு வருவதற்குள், அவனது நண்பர்கள் சுமார் 100 பேர் பொலிஸ் நிலையத்தை அடைந்திருந்தனர்.

தங்கள் நண்பனை விடக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பாட்டில்களை பொலிஸ் நிலைய ஜன்னல்கள் மீது வீசியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

பொலிஸ் நிலையம் என்று வைக்கப்பட்டிருந்த போர்டு நாசமாக்கப்பட்டது. ஒரு பொலிசார் தாக்கப்பட்டார்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக காவலில் அடைக்கப்பட்டனர்.

இரவில் வேறு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் பொலிஸ் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ஆனால், எந்த பையனால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டதோ, அவன் இப்போது பொலிஸ் காவலில் இல்லை!

அவனுக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, அவன் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட, அவர்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் அவனை பரிசோதித்ததில், அவன் போதை மருந்தும் மதுபானமும் அருந்தியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்