கார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் கார் வாங்க முடிவு செய்த ஒரு பெண், அதற்கு தேவையான பணத்தை தானே வீட்டில் அச்சடித்துக் கொண்டதால் சொந்தக் காரில் பயணிப்பதற்கு பதில் பொலிஸ் காரில் பயணிக்க நேர்ந்தது.

ஜேர்மன் பெண் ஒருவர் கார் வாங்குவதற்காக Kaiserslautern நகரிலுள்ள டீலர் ஒருவரிடம் சென்றார். ஆனால் கார் வாங்குவதற்காக அவர் கொடுத்த 15,000 யூரோக்களைப் பார்த்த அந்த டீலர், அது போலி கரன்சி என்பதை அறிந்து கொண்டார்.

அந்த பணத்தை போலி என கண்டுபிடிப்பதற்கு பெரிய துப்பறிவாளர் வேலை எல்லாம் தேவைப்படவில்லை.

காரணம் அந்த 50 மற்றும் 100 யூரோ நோட்டுகள் சாதாரண காகிதத்தில், சாதாரணமாகவீட்டில் பயன்படுத்தும் பிரிண்டரில் அச்சிடப்பட்டிருந்தன.

பொலிசார் Pirmasens நகரிலுள்ள அந்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது, பிரிண்டரில் ஏராளமான ‘பணமும்’ அச்சடிக்கப்பட்ட போலி 13,000 யூரோக்களும் கிடைத்தன.

ஜேர்மன் ஃபெடரல் குற்றவியல் பொலிசாரின் கூற்றுப்படி, சந்தையில் விடும் நோக்கில் கள்ள நோட்டுக்களை அச்சடிப்பதற்கான குறைந்தபட்ச தண்டனை, ஓராண்டு சிறைவாசமாகும்.

இந்தப் பெண்ணைப் பொருத்தவரையில் அவர் மீது இன்னமும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

தொழில் முறை கள்ள நோட்டு அடிப்பவர்கள் மிகச் சிறந்த கருவிகளை பயன்படுத்தினாலும், இது போல வீட்டில் கள்ள நோட்டுக்களை அடிப்பவர்கள் பயன்படுத்தும் கருவிகளை ஒன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள் ஜேர்மன் ஃபெடரல் குற்றவியல் பொலிசார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்