குவிந்து கிடக்கும் 2,500 சூட்கேஸ்கள்: ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் குழப்பம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

விமானப் பயணிகளின் சூட்கேஸ்களை, விமானத்திற்கு கொண்டு சேர்க்கும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் கடும் குழப்பம் நிலவுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக Düsseldorf விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், லக்கேஜ் இல்லாமலே பயணிக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

விமானப் பயணிகளின் சூட்கேஸ்களை விமானத்திற்கு கொண்டு சேர்க்கும் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஒன்று ஏற்பட்டதின் காரணமாக சுமார் 2,500 சூட்கேஸ்கள் Düsseldorf விமான நிலையத்தில் குவிந்து கிடக்கின்றன.

விமானப் பயணிகளின் சூட்கேஸ்களை விமானத்திற்கு கொண்டு சேர்க்கும் இயந்திரங்களில், ஏழில் ஐந்து பழுதானதையடுத்து இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் புறப்படும் நேரத்தில் தாமதம் ஏதும் ஏற்படாது என விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால், சூட்கேஸ்கள் தனியாக பயணித்து அதனதன் உரிமையாளர்களைச் சென்றடைய வேண்டும்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் பயணிகளின் பொருட்களை விமான நிலைய ஊழியர்கள் கையாலேயே கொண்டு சேர்த்து விடுவதால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...