நான் நலமாக இருக்கிறேன்.. கவலைகொள்ளத் தேவையில்லை! ஜேர்மனி சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தான் நலமாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி யாரும் கவலைகொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து பிரதமர் Antti Rinneஐ வரவேற்கும் நிகழ்ச்சியில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கலந்துகொண்டபோது, அவரது உடல் பயங்கரமாக நடுங்கியது. மூன்றாவது முறையாக மீண்டும் மெர்க்கலின் உடல் நடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, இரண்டு முறை மெர்க்கலின் உடல் நடுங்கியபோது நீரிழப்போ அல்லது பார்க்கின்சன் நோயோ அவரது நடுக்கத்துக்கு காரணமாக இருக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

எனினும், மூன்றாவது முறையாக அவரது உடல் நடுங்கியது கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் நலமாக இருப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். பின்லாந்து பிரதமர் Antti Rinne உடனான சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

‘ஜனாதிபதி Zelensky-யுடனான ராணுவ மரியாதைகளின் போது என்ன நடந்தது என்பதை நான் சமீபத்தில் நான் கூறியிருந்தேன். இந்த செயல்முறை இன்னும் தெளிவாக முடிக்கப்படவில்லை.

Associated Press

ஆனால், முன்னேற்றம் உள்ளது. நான் சிறிது காலம் வாழ வேண்டும். ஆனால் நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் என்னைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இது ஒருநாள் நடந்ததைப் போலவே இருந்தாலும், அது மறைந்துவிடும் என்று நம்புகிறேன். இல்லையெனில் நான் திறமையானவள் (என் வேலையைச் செய்வதில்) என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்