48 மணி நேரம் நீண்ட பாலியல் விளையாட்டு... மனைவியை பறிகொடுத்த கணவன்: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி
1579Shares

ஜேர்மனியில் தொடர்ந்து 48 மணி நேரம் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில் மனைவியை பறிக்கொடுத்த கணவனை விசாரணைக்கு உட்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

ஜேர்மனியின் கிரெஃபெல்ட் நகரில் நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் மனதளவில் திடமாக இருப்பதாகவும், அவரது செயலுக்கு அவர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவரது உடற் தகுதியை காரணம் காட்டி, எந்த வித குற்றவியல் நடவடிக்கையில் இருந்தும் அவர் தப்ப முடியாது எனவும் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருப்பவர்கள் 52 வயதான ரால்ப் ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல்(49).

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இருவரும் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மட்டுமின்றி தொடர்ந்து 48 மணி நேரம் BDSM எனப்படும் விபரீத பாலியல் விளையாட்டில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

இதில் புதுமணப்பெண் கிறிஸ்டலின் உள்ளுறுப்புகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின்னர் ஜான்கஸ் அவசரப் பிரிவுக்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினரால் கிறிஸ்டலை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

உள்ளுறுப்புகள் சேதமடைந்ததால் கிறிஸ்டல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஜான்கஸ் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் நான்கு நாட்கள் இருந்த தமது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தவறியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனைவியின் இந்த நிலை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்தது. மேலும், தமது மனைவி ஏற்கெனவே உடல் உபாதைகள் இருப்பதை தமக்கு தெரியப்படுத்தியதாகவும் ஆனால்,

மருத்துவ சோதனையில் ஏதும் தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்