என்ன ஆயிற்று ஜேர்மன் சேன்ஸலருக்கு? மூன்றாவது முறையாக நடுங்கிய ஏஞ்சலா மெர்க்கல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஏற்கனவே இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டபோது ஜேர்மன் சேன்ஸலரின் உடல்

கடுமையாக நடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக அவரது உடல் நடுங்கியதால் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் நலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஜேர்மனிக்கு வந்துள்ள பின்லாந்து பிரதமர் Antti Rinneஐ வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஞ்சலா மெர்க்கலின் உடல் மீண்டும் பயங்கரமாக நடுங்கியது.

ஜூன் மாதம் 27ஆம் திகதி ஜேர்மன் ஜனாதிபதியை சந்திக்கும்போது ஏஞ்சலா மெர்க்கலின் உடல் நடுங்கியது.

ஜூன் மாதம் 18ஆம் திகதி உக்ரைன் ஜனாதிபதி பெர்லின் வந்தபோது அவரை வரவேற்கும் நிகழ்ச்சியிலும் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் பயங்கரமாக நடுங்கியது. மருத்துவர்கள் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் நடுக்கத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் செயல்படும் தைராய்டிலிருந்து குறைந்த இரத்தச் சர்க்கரை வரை பல காரணங்களை முன் வைத்துள்ளனர் மருத்துவர்கள்.

ஊடகவியலாளர்கள் இது குறித்து கவலை தெரிவித்த போது, தனக்கு நீரிழப்பு நேரிட்டதாகவும், அதனால்தான் நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல், மூன்று கப் தண்ணீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்ததோடு, தண்ணீர் குடித்துவிட்டு பாருங்கள் எல்லாம் சரியாகி விட்டது என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

ஆனால் நீரிழப்போ அல்லது பார்க்கின்சன் நோயோ இந்த நடுக்கத்துக்கு காரணமாக இருக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், மூன்றாவது முறையும் சேன்ஸலரின் உடல் நடுங்கியது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்