இளம்பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு: புகலிடக் கோரிக்கையாளருக்கு ஆயுள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
179Shares

ஜேர்மன் இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் ஈராக் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிலிருந்து வந்து ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டவர் Ali Bashar (22).

2018ஆம் ஆண்டு, மே மாதம் 23ஆம் திகதி, Susanna Feldman என்ற 14 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை நெறித்து கொலை செய்து புதைத்து விட்டு, ஈராக்குக்கு ஓடினார் Ali.

ஜேர்மன் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சினை, சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாடு கடத்த வேண்டும் என கட்டளையிடும் அளவுக்கு பெரிதானது.

ஈராக்குக்கும் ஜேர்மனிக்கும் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இல்லை என்பதால், ஜேர்மன் அதிகாரிகள் ஈராக்குக்கு சென்று Aliயைக் கைது செய்து ஜேர்மனிக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று Aliக்கு Wiesbadenஇல் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதே Wiesbadenஇல்தான் Ali, Susannaவைக் கொலை செய்தான். Ali இழைத்த குற்றம் அசாதாரணமான அளவுக்கு மிகத் தீவிரமானது என்பதால், 15 ஆண்டுகள் ஆனாலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட Susannaவின் தாய் Diana, குற்றவாளி Aliக்கு எழுதிய ஆறு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றில், எனது இதயமும் எதிர்காலமும் காணாமல் போய்விட்டன, தவறொன்றும் செய்யாதிருந்தும் எனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாயிற்று, எனக்கு மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்