நாசிக்கள் கொள்ளையடித்த கலைப்படைப்புகள்.. பிரெஞ்சு வாரிசுகளிடம் ஒப்படைத்த ஜேர்மனி!

Report Print Kabilan in ஜேர்மனி

1940களில் பிரான்ஸில் நாசிப்படைகள் கொள்ளையடித்த கலைப் படைப்புகளை, பிரெஞ்சின் அந்தந்த வாரிசுகளிடம் ஜேர்மனி ஒப்படைத்தது.

பிரான்சில் கடந்த 1940ஆம் ஆண்டு லெவியின் சொத்தில் இருந்து கலைப் படைப்புகள் பல கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில், ஜேர்மனியின் பிரபலமான கலைப் படைப்புகளை சேகரிக்கும் Gurlitt என்பவரின் ஓவியங்களை புலனாய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

அதன் அடிப்படையில், புலனாய்வு செய்தபோது அவற்றில் சில ஓவியங்கள் பிரான்சில் நாசிக்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, குறித்த ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது நேரில் கண்ட சாட்சிகளை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

பின்னர், ஜேர்மனின் கலாச்சார அமைச்சர் Monika Gruetters மூலமாக பிரெஞ்சு ரியல் எஸ்டேட் தரகர் Gaston Prosper Levyயிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இவர் லெவியின் வழி வந்த வாரிசு ஆவார்.

ஓய்வு கால ஊதியம் பெற்று வந்த கலைப்படைப்புகளை சேகரிப்பவரான Gurlitt-யிடம், கடந்த 2012ஆம் ஆண்டு சுமார் 1,500 கலைப்படைப்புகளுக்கும் மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தந்தை 1938ஆம் ஆண்டிலிருந்து நாசிக்களுக்கான கலை வியாபாரியாக இருந்து வந்துள்ளார்.

Gurlitt இறந்த பின்னர் பெர்ன் அருங்காட்சியகம் அவரது கலைப் படைப்புகளை பாதுகாக்கும் பணியை ஏற்றுக்கொண்டது. எனினும், ஜேர்மனியில் சுமார் 500 படைப்புகளை ஒரு அரசாங்க பணிக்குழு அடிக்கடி ஆய்வு செய்து வந்ததில் இந்த விடயம் தெரிய வந்தது.

இதுகுறித்து கலாச்சார அமைச்சர் Monika Gruetters கூறுகையில், ‘எண்ணற்ற கலைப்படைப்புகளை சேகரிக்கும் Gaston Prosper Levy போன்றவர்கள், நாசிக்களால் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டன அல்லது பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றவர்கள் தங்கள் சொத்தை, அதன் மதிப்பை விட மிகக் குறைவாக விற்க வேண்டும் அல்லது தப்பி ஓடும்போது அல்லது குடியேறும்போது அதை விட்டுவிட வேண்டும். துன்பத்தையும், அநீதியையும் நாம் ஒருபோதும் நன்மை என்று கூற முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய வருவாய் முக்கியமானது தான் என்றாலும், குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாற்று நீதியையாவது வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்