நோயாளிகளின் தற்கொலைக்கு உதவிய மருத்துவர்கள்: நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் நோயாளிகள் தற்கொலை செய்து கொள்ளும்போது பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் குற்றவாளிகள் அல்ல, என ஜேர்மனியின் உச்ச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

நரம்பியல் வல்லுநரும், மன நல மருத்துவருமான ஒருவர், ஏராளமான பிரச்சினைகள் கொண்ட ஒரு 81 வயது நோயாளி மற்றும் ஒரு 85 வயது நோயாளி ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்காக அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது அவர்கள் அருகில் இருந்தார்.

அவர், குடிமக்கள், தங்களைக் குறித்த முடிவுகளை தாங்களே எடுக்கும் உரிமையை ஆதரிக்கும் ஒரு தீர்ப்பை அளிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

மற்றொரு மருத்துவர் 30 ஆண்டுகளாக வலியினால் துடித்து வந்த ஒரு 44 வயது பெண்ணுக்கு உயிரை பறிக்கும் அளவு வலிமையான மருந்தை அளித்தார்.

அந்த பெண் இறக்கும்போது அவர் அருகில் இருந்ததுடன், அவரது இறப்பைத் தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை.

நீதிமன்றத்தில் அவர், மிகவும் மோசமான ஒரு சூழலில் இருந்த தனது நோயாளிக்கு உதவுவது தனது கடமை என்று தெரிவித்திருந்தார்.

இருவரையும் விடுதலை செய்யுமாறு அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மருத்துவர்களின் செயல் கொலை அல்ல என்று தீர்ப்பளித்தனர்.

நோயாளி தற்கொலை செய்து கொள்ளும்போது, இன்னொருவர் அதற்கு உதவினாலும், அவர்களது செயல்பாடு, சட்டப்படி தண்டனைக்குரியதல்ல என நீதிபதிகளில் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்