ஜேர்மனியில் தலையில் சுட்டு கொல்லப்பட்ட மூத்த அரசியல்வாதி: விசாரணையில் திடுக் தகவல்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் மூத்த அரசியல்வாதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இடது சாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் , ஜேர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலின் கட்சியை சேர்ந்த வால்டர் லூபெக், ஹெஸ்ஸி மாநிலத்தில் உள்ள அவரது வீட்டின் மாடியில் தலையில் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

ஜேர்மனி புலம்பெயர்ந்தோர் நெருக்கடியின் உச்சத்தில் இருந்த போது சுமார் ஒரு மில்லியன் அகதிகளை வரவேற்பதற்கான மெர்க்கலின் முடிவைப் ஆதரித்து பேசியதற்காக லூபெக், தீவிர வலதுசாரிகள் இடையே பேசும் பொருளாக மாறினார். மேலும், லூபெக் குடியேறிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லூபெக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸ் சிறப்பு படை, சம்பவயிடத்தில் கிடைத்த டிஎன்ஏ ஆதாரங்களை வைத்து, கடந்த ஞாயிறுக்கிழமை காஸெல் நகரத்தில் வைத்து 45 வயதுடைய நபரை கைது செய்தனர்.

ஆனால், திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 55 வயதான ஸ்டீபன் ஈ, தான் லூபெக் கொன்ற சந்தேக நபர் என வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நடந்த விசாரணையின் படி, இந்த கொலைக்கு வலதுசாரி தீவிரவாத பின்னணி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மார்க்ஸ் ஷ்மிட் தெரிவித்துள்ளார்

எனினும், சந்தேக நபருக்கு கூட்டாளிகள் இருந்தார்கள் என்பதற்கோ அல்லது அவர் ஒரு தீவிர வலதுசாரி குற்றவியல் அமைப்பை சேர்ந்தவர் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்