கல்வி கற்க வந்த இடத்தில் ஜேர்மன் மாணவருக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியிலிருந்து கல்வி கற்பதற்காக பிரித்தானியா வந்த ஒரு மாணவரை சிலர் தாக்கியதை அடுத்து அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

Student exchange program என்னும் திட்டத்தின் கீழ் கல்வி கற்பதற்காக பிரித்தானியாவின் Canterbury நகருக்கு 17 வயது ஜேர்மன் மாணவர் ஒருவர் வந்துள்ளார்.

அவரை இளைஞர்கள் சிலரும் பெரியவர் ஒருவரும் சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

அந்த மாணவர் லெபனானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ள நிலையில், அது இனவெறித் தாக்குதலா என்பதை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

Canterburyக்கான லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Rosie Duffield, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு அவசர விசா ஒன்றை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு உள்துறைச் செயலர் சஜித் ஜாவிதை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஜேர்மனியில் வசித்தாலும், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், கல்விக்கும்,ஆன்கிலிக்கன் தேவாலயம் ஒன்றிற்கும் பிரபலமானதான Canterbury நகருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக Rosie Duffield தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு விசா நடவடிக்கைகளை பரிசீலிக்க ஐந்து நாட்கள் வரை ஆகலாம் என்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், சஜித் ஜாவித் அந்த மாணவரின் தாயாருக்கு அவசர விசா ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

இதற்கிடையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவரின் காயங்களின் தீவிரம் காரணமாக, மருத்துவர்கள் அவரை கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக Canterbury அமைந்துள்ள Kent பகுதியைச் சேர்ந்த பொலிசார், ஒரு இளம்பெண் உட்பட, 15 முதல் 17 வயது வரையுள்ள ஆறு இளைஞர்களையும், 44 வயதுடைய ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers