ஜேர்மனியில் பயணிகள் படகும், கண்டெய்னர் கப்பலும் மோதி பயங்கர விபத்து

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் பழமைவாய்ந்த பாய்மர பயணிகள் படகும், கண்டெய்னர் கப்பலும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஐந்த பேர் காயமடைந்துள்ளனர்.

ஹம்பர்க்கிற்கு அருகில் உள்ள எல்பே ஆற்றிலே இந்த விபத்து நடந்துள்ளது. நம்பர் 5 எல்பே என்ற ஜேர்மனியின் பழமை வாய்ந்த பாய்மர படகு 43 பேருடன் எல்பே ஆற்றில் பயணித்துள்ளது.

அப்போது எதிரே வந்த சைப்ரஸ் நாட்டின் கண்டெய்னர் சரக்கு கப்பலான அஸ்ட்ரோஸ்பிரைடருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் படகில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். எனினும், சேதமடைந்த பாய்மர படகு ஆற்றில் முழ்கியுள்ளது. அதை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1883 ஆம் கட்டமைக்கப்பட்ட ஜேர்மனியின் பழமை வாய்ந்த பாய்மர படகான நம்பர் 5 எல்பே, சமீபத்தில் தான் 1.3 மில்லியம் பவுண்டு செலவில் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்