ஜேர்மனியில் யூதர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Report Print Kabilan in ஜேர்மனி

யூதர்களுக்கான தொப்பியை ஜேர்மனியில் எந்த பொது இடங்களிலும் அணியக்கூடாது என அரசு அதிகாரிகளால் யூதர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் கடந்த ஆண்டு யூத எதிர்ப்பு குற்றங்கள் 20 சதவிதம் உயர்ந்ததாகவும், அவற்றில் பத்து குற்றங்களில் 9 குற்றங்கள் கடுமையாக இருந்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜேர்மனியின் முக்கிய யூதத் தலைவர், பெரிய நகரங்களுக்கு செல்லும்போது யூதர்களுக்குக்கான தொப்பியை அணிந்து செல்வது உகந்தது அல்ல என ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரத்தின் மூலம் ஜேர்மனியில் யூத எதிர்ப்பு அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, யூத விரோதத்திற்கு எதிரான உயர் அதிகாரி Felix Klein அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், யூதர்களுக்கான அடையாள தொப்பியை ஜேர்மனியின் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் யூதர்கள் அணிவதில் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், தமது கருத்தானது துரதிர்ஷ்டவசமாக தற்போது எடுத்துக்கொள்ளப்படும் முறையில் மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, யூதர்கள் அந்த தொப்பியை அணிந்து கொள்ளும்படி தன்னால் பரிந்துரைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers