மோசமான வானிலையால் வெள்ளக்காடாகிய ஜேர்மனி: படங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஞாயிறு தொடங்கி ஜேர்மனியை புரட்டி எடுத்து வரும் புயலால் தெருக்கள் வெள்ளக்காடாகியுள்ளன, போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை தென் ஜேர்மனியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் ஜேர்மனியில் வெள்ளக்காடாகியுள்ள சாலைகளால் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு பெரிய அளவில் அபாயம் காணப்படுகிறது.

பவேரியாவில் கார் ஒன்று சாலையிலிருந்து சறுக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Aitrang நகரில், சிறு நீரோடை ஒன்று நிரம்பி வழிவதால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் நடுவே கார் ஒன்று சீறிப்பாய்கிறது.

தலைநகரில் கொட்டும் மழையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Kasselஇல் வெள்ளப்பெருக்கெடுத்த நீரோடை ஒன்று போக்குவரத்தை தாமதாக்கியுள்ளது.

ஜேர்மனியின் வானிலை சேவை மையம் தென் ஜேர்மனியில் கடும்புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது, மிக அதிக பாதிப்பு ஆஸ்திரிய எல்லைப்பகுதிக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் பல பாகங்களில் இன்று காலை மழை நின்று விட்டது அல்லது பெருமளவில் குறைந்து விட்டது. என்றாலும் பவேரியா மற்றும் Nuremberg பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.

இன்று காலை Bad Gandersheim பகுதியில் தீயணைப்பு வீரர்கள் சேறு நிறைந்த சாலைகளையும் வெள்ளம் பெருகி நின்ற தெருக்களையும் சுத்தம் செய்யும் பணியை துவக்கினர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers