ஜேர்மனியில் அவசரமாக மாணவர்களை வெளியேற்றி பள்ளிகள் மூடல்: என்ன நடந்தது?

Report Print Basu in ஜேர்மனி
209Shares

ஜேர்மனியில் இரண்டு பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இரண்டு பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முனிச் நகரின், செண்ட்லிங்கின் பகுதியில் அருகே அருகே அமைந்துள்ள டேன்டே-ஜிம்னாசியம் மற்றும் கிளென்ஸ்-ஜிம்னாசியம் பள்ளிகளே மூடப்பட்டுள்ளது.

பொலிசாரின் உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, இது ஒரு மிரட்டல், ஆனால், இது ஒரு நேரடி வெடிகுண்டு அச்சுறுத்தல் அல்ல. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் உடனே மூடப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கூடுதல் தகவல்களை வெளியிட பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers