பாவ மன்னிப்பு கேட்க வந்த கன்னியாஸ்திரீயை முத்தமிட முயன்ற பாதிரியார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாவ மன்னிப்பு கேட்கும்போது அவரிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு பாதிரியாரை வாட்டிகன் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றம் தீவிர விசாரணைக்குப்பின்னும் அந்த கன்னியாஸ்திரீயின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாதிரியாரான Hermann Geissler தான் குற்றமற்றவன் என்று தெரிவித்தாலும், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Doris Wagner என்னும் அந்த கன்னியாஸ்திரீ தான் Hermannஇடம் பாவ மன்னிப்பு கேட்கும்போது, தன்னை அவர் பல மணி நேரம் முழங்காலிலேயே நிற்க வைத்ததாகவும், தன்னை அவர் காதலிப்பதாகவும், தான் அவரை காதலிப்பது அவருக்கு தெரியும் என்றும் கூறியதோடு, தங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டாலும், இணைந்து வாழ்வதற்கு வேறு வழிகள் உள்ளன என்று கூறியதாகவும் புகாரளித்திருந்தார்.

அதோடு தன்னை கைகளால் தூக்கி முத்தமிட முயன்றதாகவும் தான் பயந்து ஓடி விட்டதாகவும் Wagner கூறியிருந்தார்.

2008ஆம் ஆண்டு மற்றொரு பாதிரியார் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டதாகவும் Wagner குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் வாட்டிகனிலிருந்து அகற்றப்பட்டு விட்டாலும்கூட, கன்னியாஸ்திரீகள் பலர் இருக்கும் ஒரு இடத்தில் பாதிரியாராக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் Wagner குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்