ஜேர்மனியின் எதிர்காலம் புலம்பெயர்தலையும் ஒருங்கிணைப்பையும் நம்பி உள்ளது: ஏஞ்சலா மெர்க்கல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் தொடர்ச்சியான வெற்றி, புலம்பெயர்தலையும் புலம்பெயர்ந்தோர் ஜேர்மானியர்களுடன் எப்படி ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள் என்பதையும் பொருத்துதான் உள்ளது என்று ஜேர்மன் சேன்ஸலரான் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

பெர்லினில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஏஞ்சலா இவ்வாறு தெரிவித்தார்.

ஜேர்மன் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டதன் 70ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட புலம்பெயந்தோர் பின்னணி கொண்ட இளைஞர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரமும் சமூக உயிர்த்தன்மையும் இந்த சவால்களை நாடு எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்கிறது என்பதை பொருத்தே அமைகிறது என்றார் அவர்.

புலம்பெயர்ந்தோர் பின்னணி கொண்ட இளைஞர்களை ஜேர்மன் பணிச் சந்தையுடன் ஒருங்கிணைக்க உதவும் ஜேர்மன் புலம்பெயர்தல் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்தான் ஏஞ்சலா உரையாற்றினார்.

தனது உரையின்போது, 83 மில்லியன் ஜேர்மானியர்களில் கிட்டத்தட்ட கால் பகுதிக்கும் சற்று குறைவானவர்கள் அதாவது 19 மில்லியன் பேர் புலம்பெயர்ந்தோர் பின்னணி கொண்டவர்கள் என்பதை நினைவூட்டினார் ஏஞ்சலா.

சமீபத்தில் அதிகரித்துள்ள புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை, குறிப்பாக சிரியா, ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்துள்ள புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை மேற்கோள் காட்டிய ஏஞ்சலா, அதனால் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும் என்றாலும், இரண்டாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட சாம்பலாகிப்போன நிலையிலிருந்து இந்த அளவு மாறியிருக்கும் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களையே அது காட்டுவதாக தெரிவித்தார்.

கஷ்டங்களின் மத்தியில் அதை புரிந்து கொண்டுள்ளோம் என்று கூறிய அவர், எப்படி புலம்பெயர்தல் நமது நாட்டை மாற்றியுள்ளது என்பதையும் அது எப்படி தொடர்ந்து நம் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்துகொண்டு வருகிறோம் என்றார்.

நமது நாடு புலம்பெயர்தல் மற்றும் ஒருங்கிணைப்பின் நாடாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொண்டுள்ளோம் என்றார் ஏஞ்சலா.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்