ஜேர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வில் அம்பு மரணங்கள்: முதன்முறையாக வெளியான புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் மர்மமான முறையில் வில் அம்புகளால் கொல்லப்பட்ட நபர்களின் புகைப்படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை பவேரியாவின் Passau நகரிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றில் அம்புகளால் கொல்லப்பட்ட மூவரின் உடல்களும், Wittingen நகரிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் இரண்டு பெண்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஹொட்டல் அறையில் உயிரிழந்து கிடந்தவர்களில் Torsten Weiss (53), Kerstin Enders(33) ஆகிய இருவரும் கைகோர்த்தபடி தங்கள் படுக்கையில் படுத்தபடி இதயத்தில் அம்பு பாய்ந்து உயிரிழந்திருந்தார்கள்.

மூன்றாவது நபரான Farina Caspariதான் (30)படுக்கையில் இறந்து கிடந்த மற்ற இருவரையும் அம்பெய்து கொன்றிருக்கிறார்.

பல மைல் தொலைவில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உயிரிழந்த ஒரு 35 வயது பெண், ஹொட்டலில் உயிரிழந்து கிடந்த Farinaவின் மனைவி, அதாவது இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

தற்போது இறந்த ஐவரும் ஒரு பாலியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

இந்த அமைப்பின் தலைவர் Torsten Weiss. இவர் மற்ற பெண்களை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி அடிமை போல் அவர்களை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

கடைசியாக அடுக்கு மாடிக் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெயர் Carina (19).

அவரது பெற்றோர்கள் Weiss தங்கள் மகளை மந்திரம் போட்டு மயக்கி தங்களிடமிருந்து பிரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

பவேரிய ஹொட்டல் அறையில் இறந்தவர்கள் வில் அம்புகளால் கொல்லப்பட்டிருக்க, அடுக்கு மாடிக் குடியிருப்பில் இறந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்