70 விமானங்கள் ரத்து.... ஒரு மணிநேரம் ஸ்தம்பித்த ஜேர்மனி விமான நிலையம்: நடந்தது என்ன?

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையித்தில் ஒரு மணி நேரம் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

விமான ஓடுபாதைக்கு அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்ததால் ஒரு மணிநேரம் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விமான நிலையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்திற்கு பின்பு விமான நிலையம வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ள நிலையில் ஆளில்லா விமானம் தொடர்பாக பிராங்பேர்ட் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் தந்தவர்களை தேடினர்.

ஐரோப்பாவில் உள்ள பெரிய விமானநிலையங்களில் ஒன்றான பிராங்பேர்ட் விமான நிலையம், 2017 ஆம் ஆண்டில் 64 மில்லியன் பயணிகளுக்கு சேவையாற்றியுள்ளது. ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலைய ஓடுபாதைக்கு அருகே ஆளில்லா விமானம் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers