இத்தாலியில் வீடற்று தவித்த ஜேர்மன் நபர் மீட்கப்பட்டு தனது குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

இத்தாலியின் ரோம் விமான நிலையத்தில் காணாமல் போன ஜேர்மன் நபர் வசிப்பதற்கு வீடற்று தவித்து வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த 36 வயதான Andre G என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கடைசியாக ஜேர்மனை விட்டு செல்கையில் தனது தாய் மற்றும் அத்தையுடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இத்தாலி சென்ற இவர் வசிப்பதற்கு வீடற்ற நிலையில் ரோமில் உள்ள Fiumicino விமான நிலையத்தில் இருந்தது தெரியவந்ததையடுத்து, அதிகாரிகளின் உதவியுடன் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...