ஜேர்மன் சேன்ஸலரின் வாழ்வில் இன்னொரு நெருக்கடியான சூழல்: தாயார் மரணம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட் குழப்பங்கள் ஒருபுறம், அகதிகள் பிரச்சினையால் அவதியுற்று பதவியே போகும் சூழல் மறுபுறம் என தொடர்ந்து இறுக்கமான சூழலில் இருந்த ஜேர்மன் சேன்ஸலர் வாழ்வில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது.

ஏஞ்சலாவின் தாயார் Herlind Kasner தனது 90ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். நேற்று இந்த துயர செய்தியை வெளியிட்ட அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர், சேன்ஸலரின் தாய் Herlind Kasner மரணமடைந்ததாகவும், இந்த நேரத்தில் அவரது குடும்பத்தின் பிரைவசியை மதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லத்தீன் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரான Herlind Kasner தற்போது போலந்தின் ஒரு பாகமாக விளங்கும் Gdanskஇல் பிறந்தவர். அவரது கணவரான Horst Kasner ஒரு பாதிரியாராவார்.

Herlind எப்போதும் தம் மகளான ஏஞ்சலாவுடனேயே இருப்பார். தனது 90ஆவது வயதிலும் அவர் பாடம் கற்பித்ததாக பாராட்டப்பட்டவராவார்.

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலாவும் அவரது தாயாரும் மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள்.

எப்போதும் தன் தாயாரோடு தான் தொலைபேசியில் பேசிக்கொள்வதுண்டு என பேட்டி ஒன்றில் ஏஞ்சலா தெரிவித்திருந்தார்.

தனது தாயாரின் மரணம் தன்னை துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையிலும் சேன்ஸலர் தொடர்ந்து கடமையாற்றி வருகிறார்.

பிரெக்சிட் பேச்சு வார்த்தைகள், பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாடு என பிஸியாக செல்லும் அவரது பணியில் அடுத்த கட்டமாக நாளை உக்ரைன் அதிபரை சந்திக்க இருக்கிறார் ஏஞ்சலா.

அவரது தாயாரின் மரணம் நிகழ்ந்தும் அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...