மனநல மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்ற நபர்: புகைப்படத்தை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்த பொலிசார்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Cologne நகரில் உள்ள மனநல மருத்துவமனையில் இருந்து 67 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தப்பி சென்றுவிட்டதால் அவரது புகைப்படத்தை வெளியிட்டு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Otto Krüger என்ற நபர் மனநல மருத்துவமனையில் இருந்து சிறிது நேரம் ஓய்வில் வெளியே இருந்தவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த நபரை Cologne மற்றும் Bonn ஆகிய நகரங்களில் பொதுமக்கள் யாரேனும் இவரை பார்த்தால் உடனடியாக பொலிசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இவரது அருகில் சென்று யாரும் பேசவேண்டாம் என்றும் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் இவர் போதைமருந்துக்கு அடிமையானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1999 ஆம் ண்டு 78 வயது நபரை குத்திகொலை செய்யப்பட்டதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட இவர், இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ஒருமுறை மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்