பொலிசாரை அவசர உதவிக்கு அழைத்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டில் பெண் ஒருவர் அவசர உதவி தேவை என பொலிசாரை உதவிக்கு அழைக்க, அவரிடம் பேசிய பொலிசாரிடம் தனக்கு ஏராளமான பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளார்.

உடனடியாக அவரிடம் அவர் எங்கிருக்கிறார், அவருக்கு என்ன பிரச்சினைகள் என விசாரித்த பொலிசாருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

Lübeck நகரிலிருந்து பேசிய அந்த பெண், தான் சலூனில் இருப்பதாகவும், தான் மூன்று முறை தனது தலைமுடியை டை அடிக்க முயன்றதாகவும், மூன்று முறையும் தனக்கு திருப்தியற்ற விளைவுகளே கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

எரிச்சலுற்ற பொலிசார், இன்னொருமுறை இதுபோல் தங்களை அழைத்தால் அவசர உதவியை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரைஎச்சரித்தனர்.

இப்படி ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்ததையடுத்து, இதுபோல் தவறாக அழைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவ்வாறு அழைப்பவர்கள் பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு அழைப்பையுமே தாங்கள் முக்கியமானதாக கருதுவதாக தெரிவிக்கும் பொலிசார், இவ்வித தேவையற்ற அழைப்புகளுக்காக தாங்கள் நேரம் செலவிடும்போது, வேறொரு இடத்தில் உண்மையிலேயே மோசமான குற்றம் ஏதாவது நடந்திருக்கும் பட்சத்தில் அங்கு பொலிசார் செல்ல தாமதம் ஆக வாய்ப்புள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்