விளையாட்டு வீரர்களை கால்பந்து விளையாட அனுப்பி விட்டு கால்பந்து கிளப்பில் நடந்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தங்கள் பிள்ளைகள் விளையாடும் கால்பந்து கிளப் ஒன்றில், பிள்ளைகளை மைதானத்துக்கு விளையாட அனுப்பி விட்டு, மோசமான செயல்களுக்கு அனுமதியளித்ததாக கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் மீது பெற்றோர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

ஜேர்மனியின் Wetter என்ற நகரில், 13 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பங்கேற்கும் ஒரு கால்பந்தாட்டப்போட்டி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவர்களது கிளப் ஹவுஸில் கூட்டுப்பாலுறவு பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது.

கால்பந்தாட்ட அணியின் கோச், கிளப் ஹவுஸுக்கு ஏராளமான கார்கள் வந்ததையும், பின்னர் குளியல் உடையில் பலர் நடமாடுவதையும் பார்த்திருக்கிறார்.

உடனடியாக அவர் அதை தனது அணியின் சேர்மனுக்கு அறிவிக்க, அவர் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றிருக்கிறார்.

அவரிடம் அந்த கட்டிடத்திற்கான சாவி இருந்தும் கூட, அவரை செக்யூரிட்டிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

பின்னர் அந்த கட்டிடத்தில் பார்ட்டி ஒன்று நடப்பதற்காக வெளியிடப்பட்ட விளம்பரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அருமையான உணவும், ஏராள வகை மதுபானங்களும் மட்டுமல்ல, மோசமான வேடிக்கை விளையாட்டுகளும் உண்டு என அந்த விளம்பரம் கூறியது.

பின்னர்தான் சிறுவர்களை விளையாட அனுப்பிவிட்டு அங்கு ஆபாச கூட்டுப்பாலுறவு பார்ட்டி ஒன்று நடந்தது தெரிய வந்தது.

பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடர முயன்றபோது அவர் அந்த கால்பந்தாட்டக் குழுவின் முன்னாள் சேர்மன் என்பது தெரியவந்தது.

விளையாட்டு வீரர்களின் பெற்றோரும் கால்பந்தாட்ட அணியும் அவர்மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்