ஜேர்மனியில் ரயில்களை கவிழ்க்க சதி செய்த பயங்கரவாதி! அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in ஜேர்மனி

ஈராக் பயங்கரவாதி ஜேர்மனியில் பல ரயில் நிலையங்களில் ரயில்களை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, ஈராக்கை சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும், அவரது மனைவியும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஈராக் நபர்கள் செக் குடியரசில் கைது செய்யப்பட்டனர். வியன்னாவில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி, ஜேர்மனியின் நியூரெம்பர்க் மற்றும் மூனிச் ஆகிய நகரங்களில் அக்டோபர் மாதத்திலும், பெர்லின் நகரில் டிசம்பர் மாதத்திலும் ரயில் பாதைகளில் எஃகு கம்பிகளை வைத்து ரயில்களை கவிழ்க்க சதி செய்துள்ளான் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், அந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இந்நிலையில், நியூரெம்பர்க்-மூனிச் சுற்று வட்டப்பாதையில் உள்ள ரயில் பாதைகளில் மரம் மற்றும் எஃகு இரும்புகளைப் பயன்படுத்தி மேலும் இருமுறை பாதிப்புகளை ஏற்படுத்த முயன்றதாக பவேரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதே தளங்களில் வெவ்வேறு நேரங்களில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்காலிகமாக ரயில்களை நிறுத்தும் முயற்சிகள், தடங்களின் மீது வைக்கப்படும் குடைவுகளின் தவறான கட்டமைப்பின் வடிவமைப்பு காரணமாக தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், வியன்னாவில் கைது செய்யப்பட்ட நபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என மறுத்துள்ளார். அவரது மனைவியும் இதில் ஈடுபடுவதை மறுத்ததாக கூறியுள்ளார்.

எனினும், இஸ்லாமிய அரசு கொடி மற்றும் அரபு எழுத்துக்கள் தாக்குதல்கள் நடத்தப்பட இருந்த இடங்களுக்கு அருகே காணப்பட்டது, பயங்கரவாத நோக்கத்திற்கான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் Herbert Kickl, வியன்னாவில் கைது செய்யப்பட்டுள்ள நபருடன் மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் அடைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் செக் குடியரசு நீதிமன்றமும் சந்தேக நபர்களை ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers