முகத்தை மூடும் பெண்களுக்காக புதிய சட்டத்தை கொண்டு வரும் ஜேர்மன் அரசு!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

அரசு அதிகாரிகளின் சோதனையின் போது முகத்தை காட்ட மறுக்கும் பெண்களுக்காக புதிய சட்டத்தினை ஜேர்மன் அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனில் புலம்பெயர்வு, சுங்க அல்லது சமூக பாதுகாப்பு, இரயில் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளிடம் முகத்தை காட்ட மறுக்கும் பெண்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வரைவு சட்டத்தில் புர்கா மற்றும் நிக்காப்கள் இடம்பெறவில்லை. இருப்பினும் இந்த ஆடைகளை உடுத்தியிருக்கும் முஸ்லீம் பெண்கள் அதிகாரிகளிடம் தங்களுடைய முகத்தை காட்ட மறுத்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் இந்த சட்டமானது பாராளுமன்றத்தில் இன்னும் விவாதிக்கப்பட வேண்டி உள்ளது.

பொது இடங்களில் புர்கா மற்றும் நிகாப்கள் அணிவதற்கு ஒரு நாடு தழுவிய தடைக்கு அழைப்பு விடுப்பதற்கான முன்முயற்சியின் காரணமாக இது கருதப்படுகிறது.

வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட எர்கர்சிங்கன் குழு தான் 2009ம் ஆண்டு இந்த முயற்சியை முதலில் முன்னெடுத்தது. இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த சுவிஸ் சட்டம் தேவைப்பட்டபொழுது, 100,000 கையெழுத்துக்களை இந்த குழு சேகரித்தது.

ஆனால் முகத்தை மூடுபவர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த நாடு தழுவிய தடையை அரசு அப்பொழுது நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்