Brexit தொடர்பான தீர்வை பிரித்தானியாதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்வைக்க வேண்டும்: ஜேர்மனி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

Brexit திகதி நெருங்கி வரும் நிலையில், Brexit தொடர்பான ஒரு நல்ல தீர்வை பிரித்தானியாதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்வைக்க வேண்டும் என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு ஒன்று நெருங்கி வருவதையடுத்து, ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டுக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளதை ஜேர்மனி வரவேற்பதாக தெரிவித்தார்.

எப்படியும், அடுத்த கட்ட நடவடிக்கை பிரித்தானியாவிடம் இருந்துதான் வரவேண்டும் என்றார் அவர்.

மார்ச் 29 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்த ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு, பிரித்தானியா வெளியேறுவதை யாருமே விரும்பவில்லை என்பதை அழுத்திக் கூறினார் அவர்.

பிரஸ்ஸல்சில் மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் 22 வரை நடைபெற இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் நிச்சயம் பிரெக்சிட் குறித்து முக்கியமாக பேசப்படும் என்றார் அவர்.

இதற்கிடையில், வியாழனன்று பிரெக்சிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்டுக் கொள்வதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததையடுத்து, அத்தகைய எந்த கோரிக்கையும், மற்ற 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடமும் முறைப்படி முன்வைக்கப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தீர்மானிக்கப்படவேண்டும் என்றார் Seibert.

பிரித்தானியாவிடமிருந்து வரும் எந்த கோரிக்கையையும் கருத்தில் கொள்வோம் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்த தாமதிப்பு எவ்வளவு காலத்திற்கு தேவை, அந்த காலகட்டம் எதற்கு பயன்படுத்தப்படும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், அதுவும் பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன்.

பிரித்தானியா என்ன கருதுகிறது என்பது குறித்த பதில்களை அறிவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் மீண்டும் ஒருமுறை மாபெரும் வாய்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள Seibert, முடிவுகளை எடுப்பது தற்போது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கையில்தான் உள்ளது என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers