ஜேர்மன் விமான நிலையம் அருகே கொள்ளையடித்த மர்ம நபர்கள்: பொலிசார் விசாரணை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

Cologne-Bonn விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் பணம் செலுத்தும் டிரக்கில் இருந்து கொள்ளையடித்த 3 பேர் குறித்த விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ளனர்.

முகமூடி அணிந்த கொள்ளையர்கள் குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பு படை நபரை சுட்டுக் கொன்றனர்.

விமான நிலையத்தில் பணம் செலுத்தும் டிரக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜேர்மன் பொலிஸ் மூன்று சந்தேக நபர்களை தேடி வருகிறது.

இன்று அதிகாலை 09:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று முகமூடி மற்றும் ஆயுதமேந்திய ஆண்கள் பணத்தை எடுத்துச் சென்றனர் என்றம் இதனை தடுக்க முயன்ற பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திவிட்டு வேறு வாகனத்தில் 3 நபர்கள் தப்பியோடிவிட்டனர். நன்கு திட்டமிட்டு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்