பழி தீர்ப்பதற்காக தோட்டக்காரர் வைத்த வெடி குண்டுகள்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் கிராமம் ஒன்றில், ஒரு தோட்டக்காரர் தன்னுடன் கருத்து வேறுபாடுகள் கொண்ட மூன்றுபேரை பழி தீர்த்துக் கொள்வதற்காக வெடி குண்டுகளை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Enkenbach-Alsenborn என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தனது மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்தபோது அது வெடித்ததில் உயிரிழந்தார்.

அதேபோல் Otterberg கிராமத்தில் இருவரும் வெடிபொருட்கள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் Bernhard Graumann என்ற தோட்டக்காரர், தனது வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது.

இறந்தவர் மற்றும் காயமடைந்த இருவர் உட்பட மூவருமே Bernhardஉடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்கள்.

மூவருக்குமே Bernhardஉடன் கருத்து வேறுபாடும் இருந்திருக்கிறது.

எனவே இந்த சம்பவங்களுக்கு Bernhardதான் காரணமாக இருக்கமுடியும் என்ற முடிவுக்கு வந்துள்ள பொலிசார் மற்றவர்களையும் எச்சரிக்கும் விதத்தில் வழக்கத்துக்கு மாறாக குற்றவாளியின் பெயரை வெளியிட்டுள்ளதோடு, அவருடன் தொடர்புடைய யாராவது இருந்தால் தங்களை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்