Brexit தொடர்பில் ஜேர்மனி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

Brexit நிறைவேறிய அடுத்த கணத்திலிருந்து ஜேர்மனி தனது குடிமக்களை பிரித்தானியாவுக்கு நாடு கடத்துவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அதாவது ஜேர்மானியர் யாராவது பிரித்தானியாவில் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டு பின் ஜேர்மனிக்கு தப்பி வந்தால், குறிப்பிட்ட ஒப்பந்தத்தின்படி ஜேர்மனி தனது குடிமகனாகிய அந்த குற்றவாளியை பிரித்தானியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் பிரெக்சிட்டுக்குப்பின், சொல்லப்போனால் ஒப்பந்தங்களுக்குப்பின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால்கூட, பிரெக்சிட் நிகழ்ந்தபின் தனது நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளை பிரித்தானியாவிடம் ஒப்படைக்காது என ஜேர்மனி தெரிவித்துள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் மாதம் 29ஆம் திகதி வெளியேறுவது அனைவரும் அறிந்ததே.

2010 முதல் பிரித்தானியா சுமார் 1,800 குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜேர்மனியைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் 15 பேர் சிறார் பாலியல் குற்றங்கள், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை, மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தேடப்படும் ஜேர்மானியர்கள் ஆவார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers