ஜேர்மனில் போலி காவலர்கள் பெயரில் மக்களிடம் கொள்ளை: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

போலி காவல்துறை ஜேர்மனியின் முதியவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான யூரோக்களை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் மோசடி அழைப்பகள் ஆயிரத்திற்கும் மேல் வந்துள்ளன.

ஜேர்மனியின் பெடரல் பொலிஸ் ஆபிஸ் (BKA) துருக்கிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி இதனை கண்டுபிடித்துள்ளது.

டஜன் கணக்கான சந்தேக நபர்கள் ஜேர்மன் முதியவர்களை குறிவைத்து தாங்கள் ஜேர்மன் காவல்துறை என பேசி நூற்றுக்கணக்கான யூரோக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

நகர்ப்புற மற்றும் மாநில பொலிஸ் காவலர்களிடம் இருந்து பாதுகாப்பு சேவைகள் என கூறி அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முனிச் காவல்துறையினர் அண்மையில் குடிமக்களுக்கு அதுவும் தனிமையில் இருக்கும் வயதானவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது ஒரு ஊழல் இதுபோன்றது, சரியாக ஜேர்மன் பாஷையை பேசிய நபர் உண்மையில் துருக்கியில் வசித்துள்ளார். தேசிய தொலைபேசி எண் 110 இலிருந்து ஒரு அழைப்பு வருவது போல் தோன்றுவதற்கு ஸ்பூஃபிங் மென்பொருளை பயன்படுத்துவார்கள்.

பின்னர், அவர்கள் திருடுவதற்கு குறிவைப்பார்கள். ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க அல்லது மற்றொரு கணக்கில் தங்கள் பணத்தை மாற்றுவதற்கு அனுமதிக்க அறிவுறுத்தப்பட்ட கைவரிசையை காட்டுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers