ஜேர்மனில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை கொலை செய்த மனைவி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் Colognee நகரில் உள்ள Meuse ஆற்றில் உள்ள பையில் நபர் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பையில் உடல் பாகங்கள் மற்றும் கைகள் இருந்துள்ளன. கால் பாகங்கள் கிடைக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட உடல் எலும்புக்கூடுகளுக்கு சொந்தமான நபரின் மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்துபோன நபர் 2008 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். அப்போது அவருக்கு வயது 46. ஆனால் இவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி பொலிசில் புகார் அளிக்கவில்லை.

இந்த வழக்கில் முன்னேற்றம் 2018 ஆம் ஆண்டில் தாமதமாக கிடைத்தது. கொலை செய்யப்பட்ட ஒரு எபிசோட்டை குற்றங்கள் என்ற பெயரில் பிரபலமான ஜேர்மன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

மனிதனின் வலது தோள்பட்டை மீது காயம் மற்றும் பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது நபரின் அடையாளத்திற்கு வழிவகுத்தன. இதனை அடிப்படையாக வைத்து புலனாய்வாளர்கள் இந்த வழக்கை எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 37 வயதான மனைவியை பொலிஸார் அடையாளம் பார்த்து கைது செய்யப்பட்டதையடுத்து அவர் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers