அமெரிக்க இராணுவ தளத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இருவர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Wiesbaden நகரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் அருகில் இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டதால் பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

வேன் வாகனத்தில் வந்த 20 வயதான பயணி மற்றும் 26 வயதான நபரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து சென்ற அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாங்கள் வைத்திருந்த துப்பாக்கி நன்றாக வேலை செய்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்க இப்படி திறந்த வெளி இடத்தை பயன்படுத்தினோம் என கூறியுள்ளனர்.

இருப்பினும், இவர்களது பதில் சரியானதாக இல்லாத காரணத்தால் பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்