56 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? 20 வயது இளம் பெண் சொன்ன காரணம்

Report Print Santhan in ஜேர்மனி

இருபது வயது இளம் பெண் அப்பா வயதுடைய நபரை திருமணம் செய்து கொண்டதற்கு பணம் தான் முக்கிய காரணம் என்று இணையவாசிகள் பலரும் கூறி வந்த நிலையில், அதற்கு அந்த பெண் சரியான விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜேர்மனியின் Ruhr பகுதியைச் சேர்ந்தவர் Egon Kowalski. 56 வயதான இவர் 20 வயது மதிக்கத்தக்க Lou Nesbit என்ற மொடலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே 36 வயது வித்தியாசம் இருந்ததால், Lou Nesbit உண்மையாக காதலித்து திருமணம் செய்யவில்லை, பணத்திற்காகவே திருமணம் செய்துள்ளார் என்று இணையவாசிகள் பலரும் இந்த தம்பதியை கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து Lou Nesbit கூறுகையில், எங்களின் திருமணம் இரண்டு பேர் வீட்டாரின் சம்மதத்துடன் தான் நடைபெற்றது.

எங்கள் வீட்டில் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை, அதன் பின் அவர்களிடம் தன்னுடைய காதல் மற்றும் அவரைப் பற்றி எடுத்து கூறிய பின்னர் வீட்டில் ஒப்புக் கொண்டனர்.

சமூகவலைதளங்களில் பலரும் எங்களுடைய செக்ஸ் மற்றும் பணத்தை பற்றி தான் பேசுகிறார்கள், ஆனால் நான் பணத்திற்காக திருமணம் செய்யவில்லை.

நான் அவரை முதன் முதலில் ஒரு போட்டோ ஷுட்டில் தான் பார்த்தேன், எல்லோருடைய கண்ணும் என் மீது இருந்த போது, அவர் மட்டும் எனக்கு சற்று வித்தியாசமாக தெரிந்தார். அதை என்னால் உணர முடியவில்லை.

அதன் பின்பு தான் அது காதல் என்று தெரிந்தது. அவர் ஒரு நல்ல மனிதர், அவருடைய நடவடிக்கை எனக்கு பிடித்திருந்தது.

இதைப் பற்றி என் நண்பர்களிடம் கூறிய போது சிரித்தார்கள், யார் எப்படி பேசினாலும் எனக்கு வயதைப் பற்றி கவலையில்லை.

எங்களுக்குள் பிரச்சனைகள் வருகிறது. அதில் பெரும்பாலான பிரச்சனை சமூகத்தில் எங்களுடைய வயதைப் பற்றி தான், இதனால் நான் பல முறை கவலையடைந்திருக்கிறேன்.

எங்களுக்குள் இருக்கும் காதல் அவர்களுக்கு புரிய வைக்க அவசியமில்லை, காதல் என்பது வயதை வைத்து வருவது கிடையாது, அது ஒரு தனி உணர்வு, தயவு செய்து நீங்க்ள் யாரும் எங்களை மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்