முதியவரை பிடிக்க திரண்ட 80 பொலிசார்: சுவாரஸ்ய பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்றில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் குவிந்த 80 பொலிசார், 73 வயது முதியவர் ஒருவரைக் கைது செய்தனர்.

ஒரு முதியவரைக் கைது செய்ய இத்தனை பொலிசாரா, அப்படி என்ன குற்றம் செய்தார் என்றால், அவர் ரயில் தண்டவாளங்களை திருடியிருக்கிறார்.

ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவரான அந்த முதியவர் மீது ஜேர்மன் ஆயுத சட்டங்களை மீறிய குற்றம் வேறு இருப்பதாலேயே, அவரைக் கைது செய்ய அத்தனை பொலிசார் குவிக்கப்பட்டதாக Görlitz நகர பொலிசார் தெரிவித்தனர்.

அந்த முதியவர், 600 மீற்றர் நீளமுடைய இரயில் தண்டவாளத்தை திருடியதையடுத்து, நேற்று அவரது வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அவரை கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற முதியவரான அவர், தண்டவாளங்களை விற்றே 16,000 யூரோக்கள் வரை வருமானம் பார்த்துள்ளார்.

அவரது வீட்டிலிருந்த €10,000 யூரோக்களைக் கைப்பற்றிய பொலிசார், அவரது கூட்டாளி என கருதப்படும் இன்னொருவரும் அந்த வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதுவரை சுமார் 90 டன் தண்டவாளங்களை அவர் திருடியிருக்கிறார். Kodersdorf ரயில் நிலையம் அருகே கிடந்த தண்டவாளங்களை யாரோ எடுத்துச் சென்றதை கண்டுபிடித்த பின்னர்தான் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஒருபக்கம், ஒரு முதியவர் தண்டவாளங்களை திருடியிருக்கிறார் அது குற்றம் என்றாலும், மறுபக்கம், ஜேர்மனியில் பல ஆண்டுகளாகவே வறுமையால் அவதிப்படும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாக உள்ளது.

வீட்டு வாடகையும், போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஜேர்மானியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் மாதம் ஒன்றிற்கு 800 யூரோக்களுக்கும் குறைவாகவே சம்பாதிப்பதாக அரசு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers